90
2024ம் ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்யப்போகிறார்.
இதனால் 5 ராசிக்காரர்களுக்கு இனி அதோகதிதான்.
அதில் 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடைபெறுகிறது.
2 ராசிக்காரர்களுக்கு அஷ்டம் சனியும், அர்த்தாஷ்டம சனியும் நடைபெறுகிறது.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் ஆண்டில் சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆகவே புது முயற்சிகளை தவிர்ப்பது நல்லது, இல்லையேல் விளைவுகள் விபரீதமானதாக இருக்க நேரிடும்.
எதிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம் ஆகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கத்தால் பொருள் இழப்புகள் ஏற்படலாம். ஆகவே, ஒரு வருடமும் கவனத்துடன் இருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அதிவேகம் ஆபத்தை கொண்டு வரும்.
மகரம்:
2024ம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி காலகட்டமாகும்.
ஆதலால் சனியின் உக்கிர பார்வை மிதமிஞ்சி இருக்கும். எனவே, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் .
கும்பம்:
கும்ப ராசிக்கு சனி பகவான் அதிபதியாக இருப்பதால் சனியின் நேரடி பார்வையில் இருப்பீர்கள்.
வம்பு வழக்குகளில் தலையிடாமல் இருப்பதே உடல்,பொருள் ஆகியவற்றிற்கு நல்லது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் பேச்சினை அளந்து பயன்படுத்துவது அவசியமாகிறது. மேலும் அடுத்த ஆண்டு கொஞ்சம் சிரமமாக தான் கடக்க வேண்டியிருக்கும். அதாவது, சிரமமான காலகட்டம். ஆகையால் பொறுமையும் கவனமும் அவசியமாகிறது.
(இந்த செய்திகள், அனுமானங்கள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. தீர்க்கமான செய்திகளுக்கு நிபுணர்களை அணுகவும்)