87
Open AI-யின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து பிரபல இந்திய எழுத்தாளர் சேத்தன் பகத் (Chetan Bhagat) கருத்து தெரிவித்துள்ளார்.
Chat GPTயின் தாய் நிறுவனமான Open AI அதன் சிஇஓ (CEO) சாம் ஆல்ட்மேனை பதவி நீக்கம் செய்தது.
இதுகுறித்து Open AI வெளியிட்ட அறிக்கையில், “நிர்வாக இயக்குனர்களின் கூட்டத்தில் சாம் ஆல்ட்மேனின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது அவரிடம் பல விடயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிர்வாகம் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது.
இனியும் அவர் Open AI நிறுவனத்தை முன்னின்று நடத்த முடியும் என்று தோன்றவில்லை. எனவே அவர் நீக்கப்படுகிறார்” என தெரிவித்தது.
இதற்கு பல விதமான விமர்சனங்கள் மற்றும் கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், “சாம் ஆல்ட்மேன் நாளை புதிய AI ஸ்டார்ட்அப்பை அறிவித்தால் $10 பில்லியன் திரட்ட முடியும்; இதற்கிடையில் Open AI க்கு என்ன நடக்கும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது. பூமியில் நன்கு அறியப்பட்ட முகமான சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்துள்ளது. Open AI நிர்வாகத்திற்கு என்ன ஆனது என்று உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது” என விமர்சித்துள்ளார் .
இதற்கிடையில், குற்றச்சாட்டு வைத்து பதவிநீக்கம் செய்யப்பட்டாலும் “தனக்கு நல்ல திறமைசாலிகளுடன் பயணித்த அனுபவம் கிடைத்தது, மேலும் இதன் பிறகு பார்ப்போம்” என சாம் ஆல்ட்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.