71
இந்தியாவின் மும்பை நகரில் மொபைல் போனை தந்தை பறிமுதல் செய்ததால், மனமுடைந்த 16 வயது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலகட்டத்தில் இளைஞர்களிடையே மொபைல் போனின் மீதான மோகம் அதிகமாகி வருவதை காண முடிகிறது.
குறிப்பாக வீடியோ கேம் விளையாடுவது பதின்ம வயதினரிடையே அன்றாட வாடிக்கையாகி வருகிறது.
ஒரு சிலர் வீடியோ கேமிற்கு அடிமையாகி விடுகின்றனர்.
பெற்றோர்களின் கவனமின்மையால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவருகிறது.
கடந்த 16ம் திகதி மும்பை மல்வானியில், வீடியோ கேமிற்காக அதிக நேரம் மொபைல் போனில் மூழ்கியுள்ளான் என போனை தந்தை பறிமுதல் செய்துள்ளார். அதனை எதிர்த்து தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளான் சிறுவன். தந்தை அவனை தூங்கும்படி கூறிவிட்டு போனை எடுத்து சென்றுள்ளார் .
இதற்கு முன்பும் இதுபோல் நடந்தபோது தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்ட சிறுவன், இம்முறை துப்பட்டாவை பயன்படுத்தி சமையலறையில் தூக்கில் தொங்கியுள்ளான்.
தூக்கில் தொங்கிய சிறுவனை பெற்றோர் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அச்சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மொபைல் போன் மீதான மோகம் பதின்ம வயதுடைய ஒரு சிறுவனின் உயிரை காவு வாங்கியது பலரையும் அதிர்ச்சியிலும் , சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயதுடைய குழந்தைகளை மொபைல் போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.