86
7.11.2023 , ஐப்பசி மாதம் 21ம் தேதி செவ்வாய் கிழமையான இன்று பூரம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு காலை முதல் மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.
12 ராசிகளுக்கான ராசிபலன்கள்
மேஷம்:
பண வரத்தை அதிகரிக்கும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.
ரிஷபம்:
தொழிலில் ஏற்பட்ட தடைகளை சுக்குநூறாக்குவீர்கள். விட்டுகொடுத்து போவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
மிதுனம்:
வியாபாரத்தில் சிறிய சறுக்கல் ஏற்படலாம். வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.
கடகம்:
குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி உருவாகும். அறிவுக்கூர்மையால் சிறப்பாக செயல்படுவீர்கள்.
சிம்மம்:
துடுக்கான பேச்சு பாதிப்புகளை ஏற்படுத்தும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
கன்னி:
குடும்ப உறவு சிக்கல்களை கஷ்டப்பட்டு முடிப்பீர்கள். யாருடனும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
துலாம்:
லாபம் வரக்கூடும். எடுத்த செயல்களில் தடங்கல்கள் வராது. கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஆதரவாக அமையும் நாள் இது.
விருச்சிகம்:
சிக்கல்களை திறம்பட சமாளிப்பீர்கள். கணிசமான லாபம் அடையலாம். தொழிலை விரிவுபடுத்த திட்டங்கள் போடுவீர்கள்.
தனுசு:
பணத்தின் அருமை புரியும். அறிவுக்கூர்மையால் லாபம் காண்பீர்கள். உறவுகளால் மனக்கசப்பு வரலாம்.
மகரம்:
பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் விட்டுகொடுத்து போவதால் நன்மை உண்டாகும்.
கும்பம்:
பெற்றோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை களைவீர்கள். பண உதவி கிடைக்கும். சிறு,குறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.
2 comments
[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]
[…] ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் […]