86
டெல்லியில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
முதலில் ஆடிய இலங்கை அணி அசலங்காவின் சதத்தின் (108) உதவியுடன் 279 ரன்கள் எடுத்தது.
டன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளும், சொரிபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய வங்கதேசம் 41.1 ஓவர்களிலேயே 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக நஜ்முல் ஷாண்டோ 90 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 82 ரன்களும் விளாசினர்.
இலங்கை தரப்பில் மதுஷன்கா 3 விக்கெட்டுகளும், தீக்ஷனா மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இது உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக வங்கதேசத்தின் முதல் வெற்றி ஆகும்.