125
மார்கழி மாதம் 2ம் நாள். 18 டிசம்பர், 2023. திங்கட்கிழமையான இன்று காலை 6:26 வரை புனர்பூசம் அதன் பின்னர் பூசம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, வாழ்க்கைத் துணை புதிய முயற்சிகளில் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் பெருமையடைய வைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கணவன் மனைவியிடையே அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, உறவுகளால் சங்கடமும், செலவுகளும் ஏற்படலாம். கடினமான உழைப்பை கோரும் நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சிம்ம ராசி நேயர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். அதிகப்படியான பொறுப்புகள் சோர்வை தரக்கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணவரவு வந்துசேரும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உடல்நலனில் அக்கறை வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, இன்று தொடங்கும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். குடும்பம் சம்பந்தமாக அலைச்சல் ஏற்படும். பொறுமை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே மனக்கசப்பு வந்துபோகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் நன்மையே வந்து சேரும். வாகனத்தில் செல்லும் போது கவனத்துடன் பயணிக்கவும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணவரவு வந்துசேரும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். பேசும் வார்த்தைகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கும்ப ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். கடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் மிகவும் கவனம் தேவை. தொழிலில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்களை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, பொறுமையும் கவனமும் தேவைப்படும் நாள். வீண் அலைச்சல் சோர்வினை கொண்டுவரும். குடும்பம் சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.