137
இந்திய மாநிலம் கேரளாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நான்கு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பாடகி நிகிதா காந்தி இந்நிகழ்ச்சியில் பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சியின்போது மழை பெய்ததால் மக்கள் கூட்டமாக அரங்கத்தினுள் கூட்டமாக நுழைந்தனர்.
இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களில் 2 பேர் மாணவிகள் ஆவர்.
அத்துடன் காயமடைந்த 46 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இரண்டு பேர் தனியார் மருத்துவமனையிலும், இருவர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நுழைவு என கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசை நிகழ்ச்சி ஒன்றில் நான்கு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 comment
[…] […]