122
பிரேசிலை சேர்ந்த ஜிம் ட்ரெய்னரும் மருத்துவருமான ருடால்ப் துவார்த் என்பவர் 33 வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் டாஸ் சாண்டோஸ் (33). மருத்துவரான இவர் ஜிம் ட்ரெய்னரும் ஆவார்.
இவர் தனது உடற்பயிற்சி மற்றும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்வார்.
அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள், அவர் வழிகாட்டிய பிற உடற்பயிற்சியாளர்களின் செயத்தகு செயல்களையும் பகிர்ந்து கொள்வார்.
இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார்.
முதலில் அவர் ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டதால் தான் உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகின.
இதனை மறுத்த மருத்துவமனை, மாரடைப்பு ஏற்பட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்று விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் கரோலின் சாஞ்செஸ் என்பவருடன் சாண்டோஸிற்கு நிச்சயம் நடந்திருக்கிறது.
கரோலின், டாக்டர் சாண்டோஸ் வேலை செய்த மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றியவர் ஆவார்.
தனது வருங்கால கணவர் உயிரிழந்ததையடுத்து, கிடார் வாசித்து பாடல் பாடும் ஒரு உருக்கமான வீ lடியோவை கரோலின் வெளியிட்டுள்ளார்.
மேலும் டாக்டர் சாண்டோஸிற்கு பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.