104
இன்று கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, எடுத்த காரியத்தில் தடைகள் குறுக்கிடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதால் புதிய பிரச்சினைகளை தவிர்க்க முடியும். வாகனங்களை இயக்கும் போது மிகுந்த கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, தொழிலில் நல்ல செய்திகள் வந்தடையும் நாள். தொழிலில் ஏற்படும் போட்டிகளை வென்று பாராட்டுக்கள் பெறப்போகும் நாள். சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமுடன் இருக்கவும்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, மிகவும் மகிழ்ச்சியான நாளாக இது அமையும். தொழிலில் ஏற்படும் சிறு தடங்கல்களை உங்கள் புத்திக்கூர்மையால் முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும் நாள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, கடினமாக வேலையை கோரும் நாள். பணிச்சுமை காரணமாக சோர்வடைவீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, முன்னேற்றப் பாதையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார் ஆவீர்கள். வாகனங்கள் வாங்கக்கூடும். வழக்குகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, புதுப்பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய நாளாக இது அமையும். கணவன் மனைவி இடையே சுமூகமான அன்பு பேணப்படும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, நண்பர்கள் உங்களுடன் கலந்தாலோசனை செய்வர். உங்கள் வார்த்தைகளுக்கு மரியாதை கிடைக்கும். சிறு குறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர்களிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். கடின உழைப்பை கோரினாலும் அதற்கான பலன் கிடைக்கும் நாள்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். எடுத்த வேலையை தள்ளிப்போடாமல் செய்யுங்கள். கொடுத்த வாக்கை தட்டாமல் கடைபிடிக்க வேண்டிய நாள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்டகால கனவுத் திட்டத்தை செயல்படுத்த முதல் அடி எடுத்து வைக்கும் நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, எதிர்பாராத லாபம் கிடைக்கும் நாள். மறைமுக எதிரிகளால் தடங்கள் வந்தாலும் அதை உடைத்து முன்னேறுவீர்கள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, கவனமுடன் இருந்தால் பணத்தை பதம் பார்க்காமல் இருக்கலாம். வெளியூர் பயணத்தால் சோர்வு உண்டாகும். உடல்நலத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.