61
நம்மில் பலர் மொபைல் போனை மூன்றாவது கையாகவே கருதும் அளவுக்கு நம் வாழ்வில் செல்போன் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
அதனை மிகவும் பத்திரமாக பாதுகாக்கவும் தவறுவதில்லை. ஆயினும் போனுக்கு சார்ஜ் போடுவதில் பிரச்சனை வந்தால் நாம் அடுத்த போனிற்கான தேடலில் குதித்து விடுகிறோம். ஆனால் சில சார்ஜிங் பிரச்சனைகளை நாமே எளிதில் சரிசெய்ய முடியும்.
பொதுவாக சார்ஜ் போட்டால் மெதுவாக சார்ஜ் ஏறுகிறது அல்லது சார்ஜ் ஏறவே இல்லை என்ற பிரச்சனைகளை பலர் அறிந்திருப்போம்.
இதில் ஆன்ட்ராய்டு, ஐபோன் ஆகிய எதுவும் விதிவிலக்கு இல்லை. ஆனால் இதை ஏன் சார்ஜ் ஏறவில்லை என்ற காரணத்தை கண்டறிவதன் மூலம் சரிசெய்ய முடியும்.
1.சார்ஜிங் கேபிள், அடாப்டர், சார்ஜிங் சாக்கெட் ஆகியவற்றை முதலில் அழுக்கு, தூசு இருக்கிறதா என ஆராய வேண்டும்.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/IMG-20231114-WA0022-300x180.jpg)
2.கேபிள் எங்காவது சேதமடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக வீட்டிலுள்ள வேறு அவுட்லெட்டில் சார்ஜ் போட்டு சோதித்து பார்க்க வேண்டும்.
3.அவையனைத்தும் நன்றாக இருப்பின் வேறு போனை சார்ஜ் செய்து பார்க்கவும். வேறு போன் சார்ஜ் ஏறினால் உங்கள் போனுக்குள்ளே தான் பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
4.செல்போனில் உள்ள மூன்றாம் தர செயலிகள் கூட சார்ஜிங் பிரச்சினைகளை எழுப்பக்கூடும். அச்செயலிகளை உங்கள் போனிலிருந்து அழிப்பது போனை பாதுகாக்கும்.
5.சில சமயங்களில் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படும் ஹார்ட்வேர் பிரச்சனை கூட செல்போனை ரீஸ்டார்ட் (Restart) செய்வதன் மூலம் சரிசெய்யப்படும்.
ஆதலால் அதை செய்வதன் மூலம் கூட போனை சரிசெய்ய முடியும். உங்கள் போனில் வயர்லெஸ் சார்ஜ் வசதி இருந்தால் சார்ஜிங் பிரச்சனைகளை தவிர்க்க அதை பயன்படுத்துவது சிறந்தது .