110
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் இளம்பெண்ணொருவர் 4 பேரால் தாக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இந்த கொடூரம் அரங்கேறியது.
சுமார் 25 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணை ஆட்சேபனைக்குரிய வகையில் வீடியோ எடுத்த சிலர், அவரது தலையில் கண்ணாடி போத்தலை உடைத்துள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததுடன் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடூரத்தை குறித்த பெண் பொலிசாரிடம் புகாராக அளித்ததைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்படி, தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உதவி காவல் ஆணையர் அர்ச்சனா சிங் தெரிவித்தார்.