104
இன்று சந்திர பகவான் விருச்சிக ராசியில் விசாகம், அனுஷம் ஆகிய நட்சத்திரங்களில் பயணிக்க உள்ளார்.
மேலும், மேஷ ராசியினருக்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமுடன் இருக்க வேண்டும்.
மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, இன்று சமூகத்தின் நலனுக்கான காரியங்களை முன்னெடுப்பீர்கள். கடுமையான உழைப்பை கோரும் நாள் இது. மேலும் குடும்பத்தினரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்தடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் நாள்.
மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு அகலும். வியாபாரத்தில் இடர்பாடுகள் வந்தாலும் அதை திறம்பட தகர்த்து வேலையை முடிப்பீர்கள்.
கடகம்:
கடக ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத பணவரவு வரலாம். ஆதலால் நிதானமாக செயல்பட வேண்டும். இந்நாள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்கள் வெற்றிக்கான நாள் ஆகும். எதிரிகள் உருவாக்கும் தடைகளை சுக்குநூறாக்குவீர்கள். செல்வமும், மகிழ்ச்சியும் ஒருசேர கிடைக்கப்பெறும் நாள்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு கடினமான உழைப்பை கோரும் நாள். நேரம் வீணடிக்கப்படாமல் கவனத்துடன் வேலையை செய்வது அவசியம். குடும்பத்தில் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
துலாம்:
துலாம் ராசி நேயர்களே, உங்கள் தொழிலில் புதிய சிந்தனைகளை புகுத்தும் நாள் இது. அது லாபகரமானதாக அமையும். பெற்றோரின் ஆசிர்வாதமும், கணவன் அல்லது மனைவியின் ஆதரவும் தன்னம்பிக்கையை உயர்த்தும் நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்று பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். குடும்பத்திலுல், தொழிலிலும் அவசரப்பட்டு வார்த்தை விடுதல் கூடாது. இன்று சந்திக்க நேரிடும் நபரால் ஆதாயம் கிட்டும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே, இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எதையும் நிதானமாக அணுக வேண்டிய நாள்.
மகரம்:
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சில நற்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் கண்மூடித்தனமான நம்பிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் .
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, பூர்வீக சொத்துக்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்படலாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, நண்பர்களுடன் பேசி,பகடி செய்து கலகலப்பாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.