73
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய இந்திய அணியின் முன்னாள் 397 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி 117 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேர்ல் மிட்செல் அதிரடியில் மிரட்டினர்.
இந்த ஜோடி வெற்றியை நோக்கி செல்ல, 33 ஓவரில் ஷமி முட்டுக்கட்டை போட்டார். அவரது ஓவரில் வில்லியம்சன் 69 ரன்களில் சூரியகுமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன் பின்னர் ஷமி தனது அபார பந்துவீச்சினால் நியூசிலாந்தை நிலைகுலைய செய்தார்.
பிலிப்ஸ் தனது பங்குக்கு 41 ரன்கள் எடுத்து வெளியேற, மிட்செல் தனியாளாய் போராடினார்.
எனினும் அவரை ஷமி 134 ரன்களில் வெளியேற்றினார். அதன் பின்னர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக, நியூசிலாந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஷமி 7 விக்கெட்களும், குல்தீப், சிராஜ் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.