79
மேஷம்:
முதலீடுகளால் லாபம் அடைவீர்கள். நட்புகளால் ஆதாயம் கிட்டும்.உறவுகளில் சிக்கல் நீங்கும்.
ரிஷபம்:
பயணங்கள் மேற்கொள்வீர்கள். அனுபவித்த கஷ்டங்களுக்கான பலனை அடைய போகும் நாள்.
மிதுனம்:
பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். மனக்கஷ்டங்கள் வரலாம். அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கடகம்:
வெளியூர் பயணம் ஏமாற்றத்தை தரலாம். சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும்.ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டிய நாள்.
சிம்மம்:
வேலையில் பாராட்டுக்கள் பெறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்தது நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கன்னி:
புது புது முயற்சிகளை மேற்கொள்ளும் நாள். பணம் கொடுக்கல் வாங்கல் சுமூகமாக முடியும். குடும்பத்தில் கலகலப்பாக இருப்பீர்கள்.
துலாம்:
எதிர்பாராத, வீண் செலவுகள் வரலாம். கடன் பற்றிய யோசனைகளில் தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம்:
பொறுமையுடன் இருக்க வேண்டிய காலகட்டம். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தாமதமாகும். பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு:
உங்கள் திறமையான பேச்சால் வியாபாரம் பெருகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். தொழில் வளரும் வாய்ப்புள்ள நாள்.
மகரம்:
வெளி ஊர்களில் இருந்து நல்ல செய்தி வரக்கூடும். கடினமான உழைப்பை கோரும் நாள், ஆனால் அதற்குறிய பலன் கிடைக்கும்.
கும்பம்:
வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்க போகும் நாள். சொத்து விடயங்களில் சுணக்கம் ஏற்படும்.
மீனம்:
பூர்விக சொத்துக்கள் தலைவலியை கொடுக்கலாம். தொழில் சம்பந்தப்பட்ட நெருக்கடிகள் அகலும்.