91
கனடாவை சேர்ந்த இளம்பெண் அன்யா எட்டிங்கர்(Anya Ettinger) தன் படுக்கையின் பாதியை வாடகைக்கு விடுகிறார்.
சைக்கிள், கார் போன்ற வாகனங்களை வாடகைக்கு விடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் படுக்கையில் ஒரு பாதியை வாடகைக்கு விடும் விநோதமான முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அன்யா கனடாவின் டோராண்டோ நகரத்தில் வசிக்கிறார். இவர் சமூக வலைதளத்தில் ஒரு காணொளியை பகிர்ந்து தான் ஒரு படுக்கை துணையை தேடுவதாக தெரிவித்தார்.
படுக்கையில் ஒரு பாதியில் அன்யா உறங்குகிறார். மீதம் உள்ள பாதியை வாடகைக்கு விடும் எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது.
இந்நகரம் மிகவும் விலை உயர்ந்தது.
இந்நகரத்தில் அறையின் வாடகை மிகவும் அதிகம் ஆதலால் தான் ஒரு படுக்கை துணையை தேடுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது படுக்கையில் தங்குபவருக்கு அவரின் முதல் நிபந்தனையே “தங்குபவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்” என்பதே ஆகும்.
அடுத்ததாக தங்குபவர் குறைந்தது ஒரு வருடமாவது தன்னுடன் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு வாடகையாக மாதம் 900 கனேடிய டொலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இப்படியும் கூட பணம் சம்பாதிக்க முடியுமா என்று இச்சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.