160
நடிகர் பிரித்திவிராஜ்(பப்லு) ஷுத்தலுடனான காதல் முறிவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சில படங்களிலும் நடித்துள்ள இவர் பாலச்சந்தனின் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
58 வயதான இவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் 25 வயதான ஆட்டிசம் குறைபாடு கொண்ட மகனை பப்லு கவனித்து வருகிறார்.
தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷுத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.
ஷுத்தல் பிரித்விராஜை விட 30 வயது குறைவானவர் என்பதால் பல விமர்சனங்கள் எழுந்தன.
ஆனாலும் இருவரும் வீடியோக்கள் செய்து பதிவிட்டது பிரபலமாக சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று அதனையும் பதிவிட்டு வந்தனர்.
தற்போது ஷுத்தல் பிரித்விராஜுடனான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனால் சமூக வலைதளத்தில் பலரும் இவர்கள் காதல் முறிந்து விட்டதாக கமெண்ட் செய்தனர். இது குறித்து விளக்கமளித்த பப்லு ,
“வாழ்க்கையில் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். என் பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறிவிட்டேன். இனியும் என் தனிப்பட்ட விடயத்தை வெளியே பேச மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.