யாழில் அதிகளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே 33 வயதான குறித்த சந்தேக நபர் மாவா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைதுசெய்யப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கையின் போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.