51
குருபெயர்ச்சியினால் குருவின் பார்வை விழும் இடங்களில் வளம் செழிக்கும்.குரு சண்டாள தோஷம் முடிவுக்கு வந்த நிலையில் 6 ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஏற்றம் ஏற்படும்.
மேஷம்:
குருவின் பார்வை உள்ளபடியால் நிறைய நல்லது நடக்கும்.குடும்பத்தில் இன்பம் நிலைக்கும்.உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும். குரு அருள் புரியும் ஆலயங்களுக்கு செல்வது நன்மை பயக்கும்.
ரிஷபம்:
வருமானம் செழிக்கும்.மருத்துவ செலவுகள் வரலாம். குடும்பத்தில் அமைதி காக்க வேண்டும்.கடன்கள் தீரும் காலகட்டம்.
மிதுனம்:
குரு பார்வையின் பலனை அனுபவிப்பீர்கள். தொழில் லாபம் பெறும்,நினைத்த காரியங்கள் கைகூடும்.
கடகம்:
வகிக்கும் பதவிகளில் சிக்கல் வந்தாலும் செல்வ வரத்து குறைய வாய்ப்பில்லை. கணவன் மனைவி உறவை சுமூகமாக பேணி பாதுகாக்க வேண்டும். வியாழனன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நலம்.
சிம்மம்:
சமூகத்தில் பேர், புகழ், மரியாதை கிடைக்கும். பதவி உயர்வு, பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் ஈடேறும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
கன்னி:
பொறுமையை கடைபிடித்தால் பெருமையுடன் வாழலாம். ஏப்ரல் வரையிலும் பொறுமையுடன் செயல்படுங்கள். பணம், நிம்மதி சேரும். பாதிப்புகள் குறைய வியாழனன்று நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.