81
பாலிவுட் பிரபலம் அமீர் கான், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சாதனை படைத்ததால் அவர்களும் சூப்பர் ஸ்டார்ஸ் என தனது பதிவினை நடிகர் விஷ்ணு விஷால் திருத்தியுள்ளார்.
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.
அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் ராட்சசன் படத்தின் மூலம் பிரபலமான நடிகராக மாறினார்.
தற்போது இவர் ரஜினிகாந்துடன் “லால் சலாம்” படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கல் வெளியீட வர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில் கமல்ஹாசன், அமீர்கானை சூப்பர் ஸ்டார்ஸ் என குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நிலவி வரும் சூழலில், விஷ்ணு விஷாலின் பதிவும் சர்ச்சையானது.
இதனால் தனது பதிவினை திருத்திய விஷ்ணு விஷால், ‘நம்மிடம் ஒரு சூப்பர் ஸ்டார் பட்டம் தான் இருக்கிறது. ஆனால், சாதித்தவர்கள் எல்லாரும் சூப்பர் ஸ்டார்ஸ் தான். அன்பை பரப்புங்கள், வெறுப்பை அல்ல’ என தெரிவித்துள்ளார்.