Home » வட்டுக்கோட்டை சம்பவம் – ‘மனித உயிர் போக்கலே’ – நீதிமன்று அதிரடி தீர்ப்பு

வட்டுக்கோட்டை சம்பவம் – ‘மனித உயிர் போக்கலே’ – நீதிமன்று அதிரடி தீர்ப்பு

by namthesamnews
1 comment
அண்மையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித உயிர் போக்கலே’ என யாழ் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதேவேளை குறித்த  சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை உடன் கைதுசெய்து மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையில் இளைஞன் சார்பாக 50க்கும் மேற்பட்ட பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

வழக்கு விசாரணையின் பின்னர்  சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

வழக்கு விசாரணை இன்று பிற்பகல் ஆரம்பாகியது. இதுவரை நடைபெற்ற மரண விசாரணையின் அடிப்படையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கட்டளைகள் சிலவற்றை வழங்கியது.

இன்று 5 சாட்சியங்கள் தமது சாட்சிகளை பதிவு செய்தனர். அதில் மூன்றாம் சாட்சியாளர், இறந்த இளைஞனுடன் தானும் தாக்குதலுக்கு இலக்காகியதாக தெரிவித்தார். அவரின் சாட்சியத்தைக் கொண்டு சாட்சியாளர் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறிய 2 பொலிஸார் மற்றும் அங்க அடையாளங்கள் அடிப்படையில் அடையாளம்  கூறிய மூவர்  அடங்கலாக ஐவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.

மேலும் பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் தாக்கப்பட்டதாக கூறிய இடங்களை விஞ்ஞான ரீதியாக அடையாளம் காண சாட்சியை அழைத்து செல்ல உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது. சாட்சியின் பாதுகாப்பு கருதி சட்டத்தரணிகள் இருவர் உடன் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி மயூதரன் காயத்தை விபரித்ததோடு காயம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டதே பிரதான காரணம் என சாட்சியளித்தார்.

மரண விசாரணைகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொலிஸார்
நாட்டை விட்டு வெளியேறாத வகையில் நீதிமன்றம் பிரயாணத்தடை விதித்தது.

விசாரணையில் பொலிஸார் நால்வரே அடையாளம் காணப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில்,
சாட்சியின் அடையாளத்தை வைத்து மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

இதுவொரு ‘மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை’ என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.

இளைஞன் மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இன்றைய நீதிமன்ற நடவடிக்கையில் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட பல இடங்களில் இருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.

விசாரணை விரைவாக இடம்பெற ஏதுவாக எதிர்வரும் திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது- என்றார்.

You may also like

1 comment

வட்டுக்கோட்டை சம்பவம் - நால்வருக்கும் விளக்கமறியல் - Namthesam Tamil News November 25, 2023 - 7:11 pm

[…] வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00