85
காணியை முறையற்ற விதத்தில் அரசின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தத் தவறை 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மூலம் சரி செய்துள்ளார் எனதொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.
மேலும், காணி உரிமையை மக்களுக்கு முழுமையாக வழங்குவதன் மூலம் சுதந்திரமான பொருளாதார செயற்பாட்டில் மக்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
இது எதிர்கால பொருளாதாரத்திற்கான ஜனநாயக முதலீடாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில்ப அமைச்சர் மனுஷ நாணாயக்கார மேற்படி தெரிவித்தார்.