76
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என வினவியபோதே அவர் மேற்படி தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞனின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை முழுமையாக கிடைக்கவில்லை.
இதேவேளை, இறந்த இளைஞனுடன் கைதுசெய்யப்பட்ட மற்றய இளைஞனிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தேவை ஏற்படும் போது ஏனைய நபர்களிடமும் சாட்சியங்கள் சேகரிக்கப்படும். இதன் பின்னரே மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
1 comment
[…] வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. […]