Home » இன்றைய ராசிபலன்: 09 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 09 ஜூலை, 2024

by namthesamnews
0 comment

குரோதி வருடம் ஆனி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 09.07.2024 சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.

மேஷம்

படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தைச் சரி செய்வீர்கள்.

தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களோடு இணக்கமாக இருப்பீர்கள்.

ரிஷபம்

நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை நிச்சயமாக வாங்குவீர்கள்.

அடுத்துக் கெடுக்க நினைப்பவர்களை கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள்.

வேலை இடத்தில் இருந்த பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தாண்டுவீர்கள்.

மிதுனம்

பொதுச் சேவைகள் மூலமாக புகழடைவீர்கள்.

ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

பணி நிமித்தமான பயணங்களில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

டீக்கடை வியாபாரத்தை சுறுசுறுப்பாக நடத்துவீர்கள்.

கடகம்

தாயார் வீட்டுக்குச் செல்லும் மனைவியைத் தடுக்காதீர்கள்.

கம்பெனியின் கணக்கு வழக்குகளை சரியாகக் காட்டினால் சிக்கலில் மாட்ட மாட்டீர்கள்.

வெளியூர்ப் பயணங்களின் போது தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாதீர்கள்.

சிம்மம்

வேலையாட்கள் பற்றாக்குறையால் தொழிலில் முதலீடு செய்ய தயங்குவீர்கள்.

மெட்டீரியல் இல்லாமல் கட்டிட வேலையை தள்ளிப் போடுவீர்கள்.

சொன்ன நேரத்திற்கு வேலையை முடிக்காமல் எலெக்ட்ரிஷீயன்கள் திணறுவீர்கள்.

கன்னி

எதிர்பாராத வகையில் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள்.

மளமளவென்று பணவரவை அதிகரிப்பீர்கள். விறுவிறுப்பாக வியாபாரம் செய்வீர்கள்.

அரசு வேலையில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள்.

துலாம்

பேச்சுத் திறமையால் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள்.

தொழிலை விரிவுபடுத்த நண்பர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.

விருச்சிகம்

வேலையிடத்தில் சக ஊழியர்களின் இடையூறுகளை முறியடிப்பீர்கள்.

புரிந்து கொள்ளாமல் குடும்பத்தினர் பேசுவதால் மனக் காயம் அடைவீர்கள்.

எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள்.

தனுசு

எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் சகோதரிகளிடம் திட்டு வாங்கி கட்டிக் கொள்வீர்கள்.

கையில் வைத்திருக்கும் பணத்தைக் கவனமாகக் கையாளத் தவறாதீர்கள்.

வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டை இழுத்துப் பார்த்து விட்டுச் செல்ல மறக்காதீர்கள்.

மகரம்

சிறிய வேலை என்றாலும் பெரிய அக்கறையோடு செய்வீர்கள்.

பெற்றோர்களின் பாராட்டல் உச்சி குளிர்ந்து போவீர்கள்.

உறவுகளைத் தேடிச் சென்று உதவுவீர்கள்.

கும்பம்

ஆடல் பாடல் என்று ஆடம்பரங்களில் நாட்டம் கொண்டு அதிகம் செலவு செய்வீர்கள்.

தேவையில்லாத பழக்கங்களில் ஈடுபடாதீர்கள்.

இவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவீர்கள்.

மீனம்

உங்கள் மனம் புண்பட பேசுபவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.

வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள்.

பிள்ளைகளின் பிரச்சினையால் டென்ஷன் ஆவீர்கள்.

மனைவியின் பேச்சு கோபத்தைத் தூண்டி பொறுமை இழப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00