சீனாவில் 7 பேரை கொலை செய்ததுடன் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட 49 வயது பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில் watch விற்பனை செய்துகொண்டிருந்த லாவோ ராங்சி (Lao Rangzhi) என்ற 49 வயது பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு காரணம் 1996 முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் இவர் கொள்ளையில் ஈடுபட்டது, மிரட்டி பணம் பறித்தது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டது தான்.
அதற்கும் மேலாக 7 பேரை கொடூரமாக கொலை செய்த சீரியல் கில்லர் தான் ராங்சி. இதனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது அனைத்து சொத்துக்களும் முன்னதாக பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கு விசாரணையின்போது கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் நிறுத்தி கொண்டதாக கூறிய லாவோ, தனது முன்னாள் காதலர் பா ஜியிங்கே தான் கொலை சம்பவங்களுக்கு காரணம் என்று கூறினார்.ஆனால் நீதிமன்றம் அவரது வாதத்தினை ஏற்க மறுத்தது.
தனது தண்டனை நிறைவேற்றத்திற்கு முன்பாக குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என ராங்சி விரும்பியதால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, லாவோவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன் தன் குடும்பத்தினரிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.
கடந்த 1999ஆண்டு லாவோவின் காதலர் கைது செய்யப்பட்டு பின்னர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.