பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலைவெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ,2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஆகியோரிடம் அமைப்புப் பணிகள் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறுவன செயற்பாடுகள் திட்டமிட்டு முடிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.