89
பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி(Lionel Messi) மனைவியின் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய கொள்ளையர்கள் பணத்தை எடுத்துச் சென்ற சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி . அவரது மனைவி அன்டோனெலா ரோகுசோவுக்கு (Antonela Roccozzo) அர்ஜென்டினாவில் சொந்தமாக ஒரு பல்பொருள் அங்காடி உள்ளது.
நேற்றைய தினம் அங்காடியில் இருந்து வங்கிச் சேமிப்பில் இருப்பு வைக்க பணத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்களுடன் ரோகுசோவின் உறவினர் காரில் கிளம்பிய போது கொள்ளையர்கள் சிலர் காரை மறித்துள்ளனர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டிய அவர்கள் பணத்தை பறித்துள்ளனர். சுமார் 22.4 ஆயிரம் டொலர்கள் மதிப்புள்ள பணம் இதில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடித்த பின்பு மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
எனினும் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியில் இருந்து மீள அவர்களுக்கு சில காலம் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.