161
அவுஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களிலேயே வெளியேறிய நிலையில், அவுஸ்திரேலியா அணி கோப்பையை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
டிசம்பர் 14ம் திகதி அவுஸ்திரேலியாவின் ஆப்டஸ் மைதானத்தில் (optus stadium) டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.
இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியை உலகக்கோப்பையில் வழிநடத்திய பாபர் அசாம் (Babar Azam) கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், ஷான் மசூத் (Shan Masood) தலைமையில் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
18 வீரர்கள் அடங்கிய அணியினை பாகிஸ்தான் கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு தலைவர் வாஹாப் ரியாஸ் (Wahab Riaz) வெளியிட்டுள்ளார்.
அணி விபரம்:
ஷான் மசூத் (கேப்டன்)
ஆமிர் ஜமால்
அப்துல்லாஹ் ஷஃபீக்
அப்ரர் அஹ்மத்
பாபர் அசாம்
ஃபஹீம் அஷ்ரஃப்
ஹசன் அலி,
இமாம்-உல்-ஹக்,
குர்ரம் ஷஷாத்
மிர் ஹம்ஸா
முகமது ரிஸ்வான்
முஹம்மது வாசிம் ஜூனியர்
நோமன் அலி
சைம் அயூப்
சல்மான் அலி அகா
சர்ஃப்ராஸ் அகமது
சௌத் ஷகீல்
ஷஹீன் அஃப்ரிடி