96
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில், பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளிலேயே வெளியேறியது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சில முக்கியமான மாற்றங்களை செய்து வருகிறது.
முதலாவதாக இயக்குனர் மிக்கி ஆர்தர், தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஃபுட்டிக் ஆகியோரை பதவி நீக்கம் செய்தது.
அடுத்தகட்டமாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவிருக்கும் தொடருக்காக பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளரையும் நியமித்துள்ளது.
அதன்படி முன்னாள் வீரரான முகமது ஹபீஸை பயிற்சியாளராக தெரிவு செய்துள்ளது பாகிஸ்தான் வாரியம்.
41 வயதாகும் முகமது ஹபீஸ் வகிக்கப்போகும் முதல் பயிற்சியாளர் பணி இதுவாகும்.
இந்த அறிவிப்பு வெளியான பின்பு, அனுபவம் இல்லாத பயிற்சியாளரா? என்று பாகிஸ்தான் ஆதரவு இணையவாசிகள் வினவி வருகின்றனர்.
1 comment
[…] ஹசன் ஜோய் 86 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் […]