91
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் மீது உத்தர பிரதேச காவல் நிலையத்தில் நபர் ஒரு புகார் அளித்துள்ளார்.
ஆறாவது முறையாக உலகக்கோப்பையை அவுஸ்திரேலிய அணி வென்று சாதனை படைத்த நிலையில், மிட்செல் மார்ஷ் புகைப்படம் தான் பேசு பொருளாகியுள்ளது.
உலகக்கோப்பை மீது அவர் கால்கள் வைத்ததை ரசிகர்கள் பலர் விமர்சித்தனர்.
அதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் இதுவரை மார்ஷ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.
இந்த நிலையில் இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் மார்ஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் கேசவ் தேவ் என்பவர் மிட்செல் மார்ஷ் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
அவரது புகார் மனுவில், “பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய உலகக்கோப்பையை அவமதிக்கும் வகையில், அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் பதிவிட்ட புகைப்படம் 140 கோடி இந்திய மக்களையும் புண்படுத்தும் செயலாக உள்ளது.
அவர் மீது வழக்குப் பதிந்து கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.