ருஹுனு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர், சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விரிவுரையாளரால் தத்தெடுக்கப்பட்ட ஐந்தரை வயது சிறுமி ஒருவரே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விரிவுரையாளர் சிறுமியை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்து சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது சிறுமி தாக்குதலுக்கு மற்றும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.