90
இலங்கை பல்கலைக்கழகங்களில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டப்படி என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போது மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச அளவிலும் பிராந்தியத்திலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தேசிய உயர்கல்வி அதிகாரசபையை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிடவியல் துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.
21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், பிரதி துணைவேந்தர்களளும் நியமிக்கப்படவுள்ளனர். நாட்டிலிருந்து வெளியேறிய விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் சேவையை மீண்டும் நாம் பெற வேண்டும். அவர்களை இலங்கைக்கு வந்து, அரச பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.
அடுத்த வருடம் தொடக்கம் 41,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெரிவான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வரமுன், தேர்ந்தெடுத்த பாடநெறிக்கேற்ப நான்கு மாதங்கள் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்றார்.