92
பிக்பாஸின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் பல புதுமுகங்கள் பங்கு பெற்றுள்ளனர். அதனால் டிஆர்பி வருமா என்ற கேள்வி எழுந்தது. ஆயினும் சலசலப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் தொடர் நடைபெற்று வருகிறது.
சண்டை நடந்தது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ரெட் கார்டு கொடுத்தது என திரும்பிய பக்கமெல்லாம் Content மழை தான்.
இந்நிலையில் பிரபல நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி ஒரு யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்துள்ளார்.
அவர் “பிரதீப் மகாத்மாவும் கிடையாது, அதேநேரத்தில் மாயா, பூர்ணிமா ஆகியோர் அன்னை தெரசாவும் கிடையாது.
பிக்பாஸ் சண்டையில் நிறைய உண்மை இருக்கும், பாதி பொய் இருக்கும். அங்கு நடக்கும் என்டர்டெயின்மென்டான சிலவற்றை மக்களுக்கு காட்ட மாட்டார்கள்.
அதை கமல் மட்டுமே பார்த்திருப்பார். அவரும் வெளியே சொல்ல மாட்டார். ஒரு பெண்ணை வர்ணிக்குறது தவறே இல்லை, ஆனால் ஒரு வேலைக்காரி மாதிரி இருக்கான்னு உங்க வீட்டு பெண்களை கூட சொல்லக்கூடாது.
பிக்பாஸ் ஜோடிகள் ஷோவா? யார் யாரை லவ் பண்றதுனு ஒரு முடிவோட இருக்காங்க? இன்னும் இருட்டில் முத்தம் கொடுக்குறதையும் பாத்ரூமில் கொஞ்சுறதையும் தான் காட்டலை.
மாயாவை பத்தி எனக்கு முன்பே தெரியும். மாயா கேங்ல தான் பிரதீப் இருந்தாரு. கடைசியா அவரையே வெளிய அனுப்பிட்டாங்க.
அவர் ரொம்ப சீப்பான ஆள்தான் . அத்துடன் மாயா தன் உள்ளாடையை எடுத்து நிக்சனுக்கு காட்டிவிட்டு சும்மா காமெடிக்குனு சொல்லிட்டு போறாங்க.. ஆனால் கமல் அதனை தட்டிக்கேட்கவே இல்லை. மாறாக நல்லா கேம் ஆடறீங்கனு பாராட்டிவிட்டு போறார்.
இதெல்லாம் என்ன என்று எனக்கு புரியவே இல்லை” என்று கூறியுள்ளார்.