86
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். மீன் குழம்பும் மண்பானையும் படம் மூலம் இவர் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும், பாவக்கதைகள் எனும் இணைய தொடரில் இவர் ஏற்று நடித்திருந்த திருநங்கை கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், “விக்ரம்” திரைபடத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகனாக நடித்த காளிதாஸ் ஜெயராம், அதன்மூலம் கவனிக்கத்தக்க நடிகராக மாறினார்.
இந்த நிலையில், தனது நீண்டநாள் காதலி தாரணியுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
ஓணம் பண்டிகையின்போது காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் நடிகையும், மொடலுமான தாரணி இடம்பெற்றிருந்தார்.
அப்போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனை தற்போது உண்மைதான் என காளிதாஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
தற்போது காளிதாஸ் ஜெயராமின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.