159
மலையாள நடிகர் கலாபவன் மணி அதிகளவில் பீர் குடித்ததால் தான் உயிரிழந்தார் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ஜெமினி, ஜே ஜே, ஏய், வேல், ஆறு, பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி.
தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் 2016ஆம் ஆண்டு தன் 45வது வயதில் உயிரிழந்தது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், அவரது மரணத்தில் மர்ம இருப்பதாக கூறப்பட்டது. இதுதொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
ஏழு ஆண்டுகளாக கலாபவன் மணியின் இறப்பில் இருந்த சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது.
கேரள ஐபிஎஸ் அதிகாரியான உன்னிராஜன், “தினமும் 12 முதல் 13 போத்தல் பீர் குடித்ததாலேயே கலாபவன் மணி உயிரிழந்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கலாபவன் மணிக்கு கல்லீரல் செயலிழந்துள்ளது. ஆனாலும் அவர் அதனை கைவிடவில்லை.
அவர் இரத்த வாந்தி எடுத்த போதிலும் தினமும் பீர் குடிப்பதை தொடர்ந்துள்ளார்.
கலாபவன் மணி உயிரிழந்த அன்று 12 போத்தல் பீர் அருந்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதிக அளவில் மெத்தில் ஆல்கஹால் உடலில் கலந்து அவரது உயிரை பறித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.