80
இலங்கை முன்னாள் வீரர் அர்ஜுன ரணதுங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவை கடுமையாக விளாசியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விடயம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது தான்.
முன்னாள் ஜாம்பவான்கள் ஐசிசி மீது இந்த விடயத்தில் அதிருப்தியில் உள்ளனர்.
ஷம்மி சில்வாவின் அறிவுறுத்தலின்படியே ஐசிசி சஸ்பென்ட் நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அர்ஜுன ரணதுங்கவின் கோபம் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மீது திரும்பியுள்ளது.
அவர் கூறுகையில், ‘ இந்தியாவில் இருக்கும் நபர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்தி வருகிறார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில நிர்வாகிகளுடன் தொடர்பு இருப்பதால் ஜெய்ஷாவும், பிசிசிஐயும் இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி, தங்கள் சொல்படி நடக்க வைக்கலாம் என நினைக்கிறார்கள்.
ஜெய் ஷா இவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருப்பதற்கு காரணமே அவரது தந்தை உள்துறை அமைச்சராக இருப்பது தான்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கை அணி 9வது இடத்தில் இருப்பதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்குபெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.