76
சமீபத்தில் நிறுவனம் ஒன்று AI மனிதனைப் போன்ற உருவ அமைப்புள்ள ரோபோவை அதன் CEO-வாக அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி எல்லையே இல்லாமல் சென்றுகொண்டே இருக்கிறது. மனிதனின் வாழ்வை எளிமையாக்க பயன்பட்ட தொழில்நுட்பம் இப்போது, மனிதர்களே தேவையில்லை எனும் நிலையை நோக்கி நடைபோடுகிறது.
இதற்கு Artificial Intelligence என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
AI என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் நுழைந்து வருகிறது. இதனால் வேலை எளிதாக மாறிவிட்டாலும், மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் ஆபத்தும் உள்ளது.
அந்த வகையில் தான் தற்போது ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரக்கூடிய விடயமாக டிக்டடோர் நிறுவனத்தின் அறிவிப்பு உள்ளது.
கொலம்பியாவின் கார்டஜீனாவை தளமாக கொண்ட டிக்டடோர் எனும் மது தயாரிப்பு நிறுவனம், மிக்கா எனும் ரோபோவை CEOவாக நியமித்துள்ளது.
மிகா எனப்படும் ரோபோ டிக்டடோர் மற்றும் ஹாங்காங்கை மையமாக கொண்ட ஹான்சன் ரோபாடிக்ஸ் இடையே ஒரு ஆராய்ச்சி திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை போன்று அல்லாமல் ஓய்வு இன்றி செயல்பட முடியும் என்ற நிலையில் AI ரோபோக்கள் மனிதர்களுக்கு சவால் விடுவதை உணர முடிகிறது.
ஒரு நிறுவனத்தின் தலைவராக ரோபோ ஒன்று இருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் எதிர்காலம் இதுதானா என்ற அச்சத்தையும் இந்த அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஹான்சன் ரோபாடிக்ஸ் “சோபியா” எனும் ரோபோவை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.