66
“உயிருள்ளவரை உஷா” படத்தில் அறிமுகமான நடிகர் கங்கா மாரடைப்பால் தனது 63வது வயதில் உயிரிழந்தார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த நடிகர் கங்காவை இயக்குநர் டி.ராஜேந்தர் அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்ரி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலிலும் நடித்தார்.
திரைப்படங்கள் மட்டுமன்றி சின்னத்திரை தொர்களிலும் நடித்து வந்த கங்கா திருமணம் செய்துகொள்ளவில்லை.
தனது சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தான் திடீர் மாரடைப்பினால் கங்கா உயிரிழந்துள்ளார். அவரது இறப்பினை குடும்பத்தினர், உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.
தமது எதார்த்த நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் கங்காவின் மறைவு திரையுலகினர், ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் காங்காவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.