82
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இடைநிறுத்தியுள்ளது.
இலங்கையில் கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் தன்னாட்சி முறையில் கிரிக்கெட் சபை நிர்வாகிக்கப்பட வேண்டும் என ICC அறிவித்துள்ளது.
இடைநீக்கத்தின் நிபந்தனைகள் ICC சபையால் சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நவம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கோப் குழு முன் ஆஜராகுமாறும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.