64
சீயான் விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தயாராகி இருக்கும் “துருவ நட்சத்திரம்” படத்தின் “நரைச்ச முடி” எனும் பாடலை இன்று மாலை 5 மணிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24ம் தேதியன்று வெளியாவதை தொடர்ந்து, படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் சிம்ரன்,பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ்,ரீத்து வர்மா மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா,எடிட்டர் ப்ரவீன் ஆன்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.