77
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 401 ரன்கள் குவித்துள்ளது.
காயம் காரணமாக விலகி இருந்த கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் களமிறங்கி அதகளம் செய்தார்.
அவருக்கு துணையாக ரச்சின் ரவிந்திரா மிரட்டலாக ஆடி சதம் விளாசினார்.
ஆனால் வில்லியம்சன் 95 ரன்களில் அவுட் ஆகி சதத்தினை கோட்டைவிட்டார்.
எனினும் பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால், நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் தரப்பில் முகம்மது வாசிம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.