103
சத்யஜோதி தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்தில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே அடுத்தாண்டு பொங்கலுக்கு அயலான், அரண்மனை 4 ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், பொங்கல் பந்தயத்தில் கேப்டன் மில்லரும் இணைந்துள்ளது.
முன்னதாக, டிசம்பர் மாதம் கேப்டன் மில்லர் மில்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.