176
தமிழர் தாயக பகுதிகள் எங்கும் நாளைய தினம் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளை தடைசெய்யக் கோரி மனுத் தாக்கல்கலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி கிளிநொச்சியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களாலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்யக் கோரி பொலிஸாரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment
[…] நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய […]