94
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட மனுத் தாக்கல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை இந்த மனு மீதான விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் ஆகிய இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இந் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.