136
தமிழர் தாயகம் எங்கும் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வுபூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றன.
பொலிஸாரின் அராஜகங்கள், அச்சுறுத்தல்கள் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு எமக்காக வித்துக்கள் எம் காவிய நாயகர்களை நினைவேந்த ஒட்டுமொத்த தமிழர் தாயகமும் சளைக்கவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள், மாவீரர் துயிலும் இல்லம் என அத்தனையும் மாவீரர்ச் செல்வங்களின் உறவுகள், நண்பர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உறவுகளால் நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் கோப்பாய் மற்றும் கனகபுரம் துயிலும் இல்லங்களில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் போன்று உடை அணிந்து அவர்களைப் போலவே சிகை அலங்காரம் செய்து எம் மாவீரர்களை வணங்க வந்த இந்த பச்சிளங் குழந்தைகள் அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்கள்.
யார் சொன்னது? சிங்கள காடையர்களால் நாம் வீழ்த்தப்பட்டோம் என்று?? நிச்சயமாக வீறு கொண்டு எழுவோம்.
எம் தானைத் தலைவன் வழி……
தலைமுறைகள் நூறு அல்ல ஆயிரம் கடந்தாலும் நீங்கள் தந்த வீரங்கள் மறக்குமா?
1 comment
[…] வருகின்றனர். குறிப்பாக மாவீரர் நாளன்று வவுனியாவில் செய்தி […]