113
மாகாண சபை என்பது தமிழ் மக்களை பொறுத்த மட்டில் மிக முக்கியமான விடயமாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
இந்த மாகாண சபை ஒரு முழுமையான தீர்வாக இல்லாதுவிட்டாலும் அதனை நாங்கள் கொண்டு வரவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கின்றோம் .
சிலர் விடும் பிழைகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிடைந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் கட்டாயமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். – என்றார்.