108
இன விடுதலைக்காக, தம்முயிரை இன்னுயிராக்கிய காவிய நாயகர்களை தமிழர் தாயகம் எங்கும் நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும்.
எம் காவிய நாயகர்களை நினைவேந்தும் முகமாக வடக்கு கிழக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் மிக உணர்வெழுச்சியுடன் கடந்த ஒரு வாரமாக நினைவேந்தல் நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இன்று கார்த்திகை 27….
தம் இனத்துக்காக, இன விடுதலைக்காக, தமிழர் உரிமைக்காக போர்க்களம் கண்ட வீர மறவர்களை நினைவேந்த தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மக்கள் திரண்டனர்.
அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் என அனைத்தையும் துச்சமென தாண்டி எம் வீரச் செல்வங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் துயிலும் இல்லங்களில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி தம் சொந்தங்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
துயிலும் இல்லங்கள் எங்கும் தாயகப் பாடல்கள் ஒலிக்க நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
உறவுகளை நினைவேந்திய இந்த நாளில் தமிழர் தாயகம் எங்கும் கண்ணீர் மழையில் நனைந்தது.
1 comment
[…] தமிழர் தாயகம் எங்கும் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக […]