113
1756 ஆம் ஆண்டு, படையெடுத்த டச்சுக்காரர்கள் கண்டி அரச மாளிகையைத் தாக்கி, எடுத்துச் சென்ற புகழ்பெற்ற Lewke’s canon, இரண்டு தங்க வாள்கள் ( கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் சம்பிரதாய வாள்கள்), ஒரு அரச தங்க கத்தி, ஒரு வெள்ளி வாள் மற்றும் இரண்டு இயந்திர துப்பாக்கிகள் ( லெவ்கே மஹா திசாவின் துப்பாக்கி ) உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்து அரசால் மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில், இன்று காலை நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இன்று காலை 05.05 மணியளவில் ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-554 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்தக் கலைப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன.
இவை இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் இந்த தொல்பொருட்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பினை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கையளித்ததுடன் அமைச்சர் அதனை தேசிய அருங்காட்சியக திணைக்கள பணிப்பாளரிடம் கையளித்தார்.
விரைவில் இவை பொதுமக்கள் பார்வையிட வைக்கப்படவுள்ளன.