68
யூரோ கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணி 6-0 என ஜிப்ரால்டர் அணியை வீழ்த்தியது.
அல்கர்வ் (Algarve) மைதானத்தில் நடந்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிப்ரால்டர் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே நெதர்லாந்துக்கு முதல் கோல் கிடைத்தது.
கெல்வின் ஸ்டெங்ஸ் (Calvin Stengs) மிரட்டலாக அந்த கோலை அடித்தார்.
அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அணி கோல் வேட்டையை தொடங்கியது.
23வது நிமிடத்தில் வீப்பெரும் (Wieffer), 38வது நிமிடத்தில் கூப்மெய்னர்சும்(Koopmeiners) கோல் அடித்தனர்.
ஜிப்ரால்டர் அணியால் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாததால் நெதர்லாந்து அணி 3-0 என முன்னிலை வகித்தது.
அதன் பின்னரான இரண்டாம் பாதியில் கெல்வின் அசுரவேக ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
அவர் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடிக்க (50, 62வது நிமிடம்) ஜிப்ரால்டர் அணி கதிகலங்கியது.
81வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கக்போ (Gakpo) அசத்தலாக கோல் அடித்தார்.
கடைசி வரை ஜிப்ரால்டர் அணியால் கோல் அடிக்க முடியாததால் நெதர்லாந்து அணி 6-0 என மிரட்டல் வெற்றியை பெற்றது.
நெதர்லாந்து அணிக்கு இது 6வது வெற்றி ஆகும். இதன்மூலம் அந்த அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
1 comment
[…] துப்பாக்கி ) உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்து அரசால் மீண்டும் இலங்கைக்கு […]