90
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்கோட்டில் 9ஆம் வகுப்பு பயின்று மாணவி சாக்ஷி ரஜோசரா. இவர் வகுப்பறையில் காலையில் திடீரென சரிந்து விழுந்தார்.
இதனையடுத்து சாக்ஷி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தேர்வு அறைக்குள் நுழையும் தருவாயில் சாக்ஷி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிய வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில், மாரடைப்பு இளைஞர்களிடையே அதிகமாகி வருவதை காண முடிகிறது.
அண்மையில் நவராத்திரி நிகழ்ச்சி ஒன்றில் “கர்பா” நடனம் ஆடிய இரு சிறுமிகள் உட்பட, இளம்வயதினர் 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment
[…] ருடால்ப் துவார்த் என்பவர் 33 வயதிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை […]