Home » மாசியில் பணத்தை அள்ளப்போகும் ராசியினர்!

மாசியில் பணத்தை அள்ளப்போகும் ராசியினர்!

by Vaishnavi S
0 comment

வரும் மாசி மாதத்தில் சூரிய பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே, சனி பகவான் கும்பராசியில் இருப்பதால், சனி பகவானுடன் சூரியன் இணையும்போது எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

மேஷம்

வேலையில் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். சம்பள உயர்வு திருப்திகரமாக கிடைக்கும். தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் மாசி மாதம் மிகவும் சிறந்த காலமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் நினைத்த காரியத்தை செய்து முடிப்பார்கள். வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் மாதமாக மாசி மாதம் இருக்கும். வேலையை மாற நினைப்பவர்களுக்கு, இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும்.

துலாம்

மனநிம்மதி கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். முதலீட்டு திட்டங்கள் வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

புகழ் உயரும். அதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டி கூடுதல் சலுகைகளை வழங்குவர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்

இந்த மாசி மாதம் கும்ப ராசியினருக்கு பணத்தை அள்ளித்தரப் போகும் மாதம் என்றே கூறலாம். பொருளாதார ரீதியாவும், சமூக ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த மாசி மாதத்தால் வரும் காலங்களில் நல்ல வருமானம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்த தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தரவுகள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை என்பதால் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00